/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கு டி.ஆர்.பி., தேர்வு: 1,039 பேர் பங்கேற்பு

ADDED : டிச 28, 2025 07:24 AM
நாமக்கல்: நாமக்கல்லில், 5 மையங்களில் நடந்த அரசு கல்-லுாரி உதவி பேராசிரியர்களுக்கான டி.ஆர்.பி., போட்டி தேர்வில், 1,039 பேர் பங்கேற்றனர். 71 பேர் கலந்துகொள்ளவில்லை.ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், தமிழக அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் மற்றும் அரசு பி.எட்., கல்லுாரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது.
நாமக்கல்லில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள், அரசு மகளிர் மற்றும் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெய் விகாஸ் மற்றும் டிரினிடி அகாடமி மெட்ரிக் பள்ளி என, 5 மையங்-களில் தேர்வு நடந்தது.இத்தேர்விற்காக, மாவட்டம் முழுவதும் இருந்து, 1,110 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். தேர்-வர்கள், காலை, 8:30 முதல், 9:00 மணிக்குள்ளும், மதியம், 2:00 முதல், 2:30 மணிக்குள்ளும் அனும-திக்கப்பட்டனர்.
நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நி-லைப்பள்ளி மையத்தில் நடந்த டி.ஆர்.பி., போட்-டித்தேர்வை, கலெக்டர் துர்கா மூர்த்தி ஆய்வு செய்தார். இந்த தேர்வில், 1,039 பேர் பங்கேற்-றனர். 71 தேர்வகள் கலந்துகொள்ளவில்லை.