/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மனைவி, குழந்தையை பார்க்க சென்ற போது வாகனம் மோதி வாலிபர் பலியான சோகம்
/
மனைவி, குழந்தையை பார்க்க சென்ற போது வாகனம் மோதி வாலிபர் பலியான சோகம்
மனைவி, குழந்தையை பார்க்க சென்ற போது வாகனம் மோதி வாலிபர் பலியான சோகம்
மனைவி, குழந்தையை பார்க்க சென்ற போது வாகனம் மோதி வாலிபர் பலியான சோகம்
ADDED : மார் 31, 2024 04:12 AM
ப.வேலுார்: மனைவி மற்றும் பிறந்து, 24 நாட்களே ஆன குழந்தையை பார்க்க சென்ற வாலிபர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம், உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே வாங்கப்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கவுதமன், 27; கட்டட கான்ட்ராக்டர். இவருக்கும், நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே அர்த்தனாரிபாளையத்தை சேர்ந்த நந்தினி, 27, என்பவருக்கும், 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த, 24 நாட்களுக்கு முன், திருச்செங்கோட்டில் உள்ள மருத்துவமனையில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, புல்லட் வண்டியில் கரூரிலிருந்து, அர்த்தனாரிபாளையம் நோக்கி சென்றார்.
ப.வேலுார் பைபாஸ், அனிச்சம்பாளையம் பிரிவு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கவுதமன் உயிரிழந்தார். விபத்தில் இறந்த கவுதமன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதாவின் சகோதரி ரம்யாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மனைவி மற்றும் குழந்தையை பார்க்க சென்ற கவுதமன், விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

