/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குறுகிய வளைவில் போக்குவரத்து நெரிசல்
/
குறுகிய வளைவில் போக்குவரத்து நெரிசல்
ADDED : டிச 29, 2024 01:10 AM
பள்ளிப்பாளையம், டிச. 29-
பள்ளிப்பாளையம் பகுதி ஆர்.எஸ்., சாலையில், குட்டைமுக்கு என்ற இடத்தில் கொண்டை ஊசி போன்று, 3 வளைவுகள் உள்ளன. இந்த வளைவு பகுதியில் வாகனங்கள் அருகில் வரும்போது தான் தெரியும். கவனக்குறைவாக வந்தால் விபத்து ஏற்படும். இரவு நேரத்தில் டூவீலரில் வரும் வயதானவர்கள், அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்த வளைவு பகுதியில் உள்ள கடை, பேக்கரிக்கு வருவோர் தங்களது வாகனங்களை, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி விடுகின்றனர். இதனால் வளைவு பகுதி மேலும் குறுகியதாக மாறி, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதேபோல், நேற்று மாலை, 2:00 மணிக்கு இரண்டு லாரிகள் இந்த வளைவு பகுதியில் வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் வந்தால் கூட செல்வதற்கு வழியில்லை. அதிக வாகனங்கள் செல்லும் சாலை என்பதால், குட்டைமுக்கு வளைவு பகுதியை வாகனங்கள் சீராக செல்லும் வகையில் விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

