/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பம் மற்றொரு கம்பத்தில் கயிறால் கட்டி வைப்பு

ADDED : அக் 17, 2024 01:13 AM
சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பம்
மற்றொரு கம்பத்தில் கயிறால் கட்டி வைப்பு
நாமக்கல், அக். 17-
நாமக்கல்லில், சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை, மற்றொரு கம்பத்தில் கயிறு மூலம் கட்டி வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாமக்கல், துறையூர் சாலையில் இருந்து சேந்தமங்கலம் சாலை, ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் வகையில் இணைப்பு சாலை, நடராஜபுரம் நான்காவது தெருவில் சாக்கடை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக பழைய சாக்கடையை துார்வாரி, பக்கவாட்டுகளில் இருந்த சிதிலமடைந்துள்ள பழைய தடுப்பு சுவர்கள் வெட்டி அகற்றப்பட்டது. பணியின் போது அருகே உள்ள மின் கம்பம் ஒன்று சாயும் நிலையில் இருந்தது. அதனால், அப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய பணியாளர்கள், சாயும் நிலையில் இருந்த மின் கம்பத்தை அருகே உள்ள மற்றொரு மின் கம்பத்தில், வடக்கயிறு மூலம் கட்டி விட்டு சென்றனர். அதனால் அப்பகுதி மக்கள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
எனவே, சாக்கடை பணியை விரைவாக கட்டி முடித்து, மின் கம்பங்களுக்கு கான்கிரீட் கலவை அமைத்து சீரமைக்க வேண்டும்.