/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வழிப்பறி குற்றவாளிகளை பிடிக்கஏ.டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படை
/
வழிப்பறி குற்றவாளிகளை பிடிக்கஏ.டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படை
வழிப்பறி குற்றவாளிகளை பிடிக்கஏ.டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படை
வழிப்பறி குற்றவாளிகளை பிடிக்கஏ.டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படை
ADDED : ஏப் 06, 2025 01:09 AM
வழிப்பறி குற்றவாளிகளை பிடிக்கஏ.டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படை
புதுச்சத்திரம்:நாமக்கல்-சேலம் ரோட்டில் நடக்கும் டூவீலர் வழிப்பறி சம்பவ குற்றவாளிகளை கைது செய்ய, ஏ.டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் இருந்து புதுச்சத்திரம் வழியாக ஆண்டகலுார் கேட் வரை தினமும் ஏராளமான பெண்கள் காலை, மாலை நேரங்களில், ராசிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள அரசு, தனியார் அலுவலகங்களுக்கு டூவீலரில் சென்று வருகின்றனர். இவர்களை கண்காணிக்கும் மர்ம கும்பல், நகரை விட்டு சிறிது துாரம் தள்ளி நின்று, யாரும் இல்லாத இடங்களில் நகைகளை பறித்துக் கொண்டு சென்று விடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன், ராசிபுரத்தில் இருந்து வந்த தனியார் கல்லுாரி பேராசிரியையின் நகைகளை டூவீலரில் சென்ற ஒருவர் வழிமறித்து பறித்து சென்றார்.
இதுகுறித்து, புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வரும் நிலையில், தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால், குற்றவாளிகை கைது செய்ய, ஏ.டி.எஸ்.பி., பவித்ரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர், புதன்சந்தை, புதுச்சத்திரம், ஆண்டகலுார்கேட் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராக்கள் மற்றும் செல்போன் டவர்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என, போலீசார் தெரிவித்தனர்.