ADDED : டிச 31, 2025 05:52 AM

நாமக்கல்: நாமக்கல்-துறையூர் சாலையில், ரயில்வே மேம்-பாலம் அமைந்துள்ளது. அங்கு மாநகராட்சி நிர்-வாகம் மூலம் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு, நகரின் பல்வேறு பகுதி குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் அதன் வழியாக கொண்டு செல்லப்
படுகிறது.
இந்நிலையில், ரயில்வே மேம்பாலம் அருகே இருந்து திருச்சி சாலைக்கு செல்லும் வகையில் இணைப்பு சாலை பகுதியில் சாலையின் கீழ் பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு. அதிலிருந்து வெளியாகும் கழிவுநீர் நேரடியாக சாலையில் வழிந்தோடுகிறது.
அதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசு-கிறது. இதுகுறித்து அப்பகுதி வர்த்தக நிறுவனங்-களை சேர்ந்தவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அடைப்பு ஏற்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.

