/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சைபர் குற்ற வழக்கில் மீட்ட ரூ.9.59 லட்சம் ஒப்படைப்பு
/
சைபர் குற்ற வழக்கில் மீட்ட ரூ.9.59 லட்சம் ஒப்படைப்பு
சைபர் குற்ற வழக்கில் மீட்ட ரூ.9.59 லட்சம் ஒப்படைப்பு
சைபர் குற்ற வழக்கில் மீட்ட ரூ.9.59 லட்சம் ஒப்படைப்பு
ADDED : டிச 25, 2024 07:44 AM
நாமக்கல்: வெண்ணந்துாரை சேர்ந்தவர் தமிழரசன். இவர், போலி போதைப்பொருள் பார்சல் மூலம் ஆன்லைனில், 8 லட்சத்து, 77,336 ரூபாயை இழந்தார். இதேபோல் பிள்ளாநல்லுாரை சேர்ந்த நந்தகுமார் என்பவர், போலி கூரியர் மோசடி மூலம், 81,676 ரூபாயை இழந்தார்.
இதுகுறித்து, இருவரும் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தனர். விசாரணை நடத்தி வந்த போலீசார், சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து பணத்தை மீட்டனர். அதை தொடர்ந்து, நேற்று நாமக்கல் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மீட்கப்பட்ட பணத்தை, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் இருவரிடமும் ஒப்படைத்தார். அப்போது, 'ஆன்லைன் மோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புகார்களை உடனுக்குடன் சைபர் கிரைம் உதவி எண் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் அல்லது www.cybercrime.gov.in இணையம் மூலம் பதிவு செய்ய வேண்டும்' என்றார்.