/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தமங்கலம், எருமப்பட்டியில் ரூ.358 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
/
சேந்தமங்கலம், எருமப்பட்டியில் ரூ.358 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
சேந்தமங்கலம், எருமப்பட்டியில் ரூ.358 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
சேந்தமங்கலம், எருமப்பட்டியில் ரூ.358 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
ADDED : ஏப் 02, 2024 04:02 AM
சேந்தமங்கலம்: ''சேந்தமங்கலம், எருமப்பட்டி யூனியனில், 358 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்டத்தை, முதல்வர் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார்.
சேந்தமங்கலம் ஒன்றிய, தி.மு.க., கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம், சேந்தமங்கலத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான பொன்னுசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான, எம்.பி., ராஜேஸ்குமார் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் வறட்சி ஒன்றியங்களாக இருந்த சேந்தமங்கலம், எருமப்பட்டி ஒன்றியங்களில் மக்களின் குடிநீர் பிரச்னையை முழுமையாக தீர்க்க, முதல்வர் ஸ்டாலின், நிதிநிலை அறிக்கையில், இந்த, 2 ஒன்றியத்தில் உள்ள, 168 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்க, 358 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை அறிவித்துள்ளார். அடுத்தாண்டு பொங்கலுக்குள் காவிரி நீர், இரண்டு ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்கும்.
காளப்பநாயக்கன்பட்டிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாயில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்ததால், 6 கோடி ரூபாயில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல் சேந்தமங்கலத்திற்கு, 8 கோடி ரூபாயில் புதிய குடிநீர் குழாய் அமைக்கப்பட உள்ளது. சேந்தமங்கலம் பகுதியில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம் அமைய உள்ளது. சேந்தமங்கலம் நீதிமன்றத்திற்கு புதிய சொந்த கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணி தொடங்கப்பட உள்ளது. சேந்தமங்கலத்தை தலைமை இடமாக கொண்டு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. சேந்தமங்கலம் ஒன்றியத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் தோட்டக்கலை துறை மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்யும் பண்ணை அமைக்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நகர செயலாளர் தனபாலன், செயலாளர் முருகேசன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி தலைவர் நல்லு ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் ராணி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆனந்தபாபு, இளைஞரணி துணை அமைப்பாளர் கலைவாணன், டவுன் பஞ்., முன்னாள் தலைவர் பெரியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

