/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
/
சாலைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : மார் 12, 2024 04:29 AM
நாமக்கல்: தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், தொடர் காத்திருப்பு போராட்டம், நேற்று துவங்கியது. சங்க கோட்ட தலைவர் ஜாகீர் உசேன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வேலு விஜயன், இணை செயலாளர்கள் ராமலிங்கம், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பாலசுப்ரமணியன் துவக்கி வைத்து, போராட்டம் குறித்து விளக்கி பேசினார்.
தமிழக சார்நிலை பணியமைப்பு விதிகள்படி, முதல்நிலை பட்டியலை முறைப்படுத்த வேண்டும். தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சாலை பணியாளர்கள் சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு உரிய கருவி, தளவாடங்கள் மற்றும் காலணி உள்ளிட்ட பதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, பொதுச்செயலாளர் அம்சராஜ், மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

