/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பு குடிநீரை பரிசோதனை செய்ய கோரிக்கை

ADDED : மார் 19, 2024 07:30 AM
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதால், குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆற்றில் சாயக்கழிவுநீர் அதிகளவு கலப்பதால், மக்களுக்கு வழங்கும் குடிநீர் சுத்திகரித்து வழங்கினாலும், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
இதுகுறித்து, கடந்த, 16ல் நடந்த பள்ளிப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்
சரவணன், சாயக்கழிவு நீரால் குடிநீர் பாதிக்கப்படுகிறது. இந்த குடிநீர் குடிக்கும் மக்களுக்கு புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இந்த குடிநீரை பரிசோதனை செய்ய வேண்டும் என, புகார் தெரிவித்துள்ளார்.
எனவே, மாவட்ட நிர்வாகம் அலட்சியம் செய்யாமல், குடிநீரை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.