/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோரம் தோண்டப்படும் குழியால் பொதுமக்கள் அவதி
/
சாலையோரம் தோண்டப்படும் குழியால் பொதுமக்கள் அவதி
ADDED : செப் 09, 2025 02:41 AM
ராசிபுரம், ?:ராசிபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் என, கடந்த, 10 ஆண்டுகளாக சாலை மற்றும் சாலையோரங்களில் மாற்றி மாற்றி, குழிபறித்துக்கொண்டே இருந்தனர். தற்போது, சில மாதங்களாகத்தான் சாலைகள் போடப்பட்டு பொதுமக்கள் எவ்வித சிரமமும், போக்குவரத்து பாதிப்பும் இன்றி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், தனியார் செல்போன் நிறுவனம் கேபிள் பதிக்க ராசிபுரம் நகராட்சி பகுதியில் சாலையை தோண்ட தொடங்கியுள்ளனர். முக்கியமாக, சேலம் சாலையில், தபால் நிலையம் பகுதியில் குழி தோண்டி வருகின்றனர்.
பரபரப்பான சாலையில், இரவு தோண்டி பகலில் வேலையை முடிக்காமல், கடந்த இரண்டு நாட்களாக இதே பணியில் உள்ளனர். தபால் நிலையத்திற்கு காரில், ஆட்டோவில் வருபவர்கள் தபால் நிலையம் முன்புதான் நிறுத்திவிட்டு வருகின்றனர்.
ஆனால், குழிபறித்த மண் இருப்பதால் காரை துாரமாக நிறுத்திவிட்டு வரவேண்டியுள்ளது. ஒரு சிலர் அதே இடத்தில் காரை நிறுத்தினால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகம், காவல்துறையினர் இணைந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.