/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அலவாய்பட்டியில் மக்கள் குறை கேட்பு கூட்டம்
/
அலவாய்பட்டியில் மக்கள் குறை கேட்பு கூட்டம்
ADDED : டிச 19, 2025 06:11 AM
வெண்ணந்துார்: ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், கிராமங்கள்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அலவாய்ப்பட்டி பஞ்., பகுதிக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
குடிநீர், கழிவுநீர் ஓடை, கழிப்பிடம், தண்ணீர், சாலை, போக்குவரத்து வசதி கேட்டு மக்கள் கோரிக்கை மனுக்களை வைத்தனர். இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் மனுக்கள் மீது, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.வெண்ணந்துார் அட்மா குழுத் தலைவர் துரைசாமி, பி,டி,ஓ., மலர்விழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

