/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்' மோகனுாரில் திட்ட முகாம்
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்' மோகனுாரில் திட்ட முகாம்
'உங்களை தேடி உங்கள் ஊரில்' மோகனுாரில் திட்ட முகாம்
'உங்களை தேடி உங்கள் ஊரில்' மோகனுாரில் திட்ட முகாம்
ADDED : நவ 21, 2024 05:59 AM
மோகனுார்: மோகனுார் தாலுகாவில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்-டத்தில், வருவாய், ஆதிதிராவிடர் நலன், உயர்கல்வி, பால்வளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும், அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்-கொள்ளப்பட்டது.
இதில், கலெக்டர் உமா, லத்துவாடி அண்ணா அரசு கலை கல்லுா-ரியில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள், உணவு பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாணவியருடன் கலந்துரையா-டினார்.மோகனுார் ஒன்றியம், சின்னபெத்தாம்பட்டி பஞ்., தொடக்கப்பள்-ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடி, கற்றல் திறன் குறித்தும் ஆய்வு செய்தார்.
அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டு, மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு-களின் பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

