/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூலி ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி விசைத்தறி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
கூலி ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி விசைத்தறி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
கூலி ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி விசைத்தறி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
கூலி ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி விசைத்தறி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 07, 2024 12:01 PM
பள்ளிப்பாளையம்: விசைத்தறி தொழிலாளர்களுக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை முறையாக அமல்படுத்த கோரி, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு., சார்பில், வெப்படையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். செயலாளர் அசோகன்
கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த வால்ராசம்பாளையம் பகுதியில் செயல்படும் ஒரு விசைத்தறி கூடத்தில் வேலை செய்யும், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த செப்., 14ல், நாமக்கல் கலெக்டரை சந்தித்து, விசைத்தறிக்கூட உரிமையாளர்கள் தங்களுக்கு முறையான கூலி வழங்குவதில்லை.
கொத்தடிமை போல் நடத்தி வருகிறார். தங்களை மீட்க வேண்டும் என, மனு அளித்தனர். இதையடுத்து, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக, 10,000 ரூபாய், 9.50 சதவீதம் போனஸ், 2024 முதல், 10 சதவீதம் கூலி உயர்வு என, பத்து அம்ச கோரிக்கைகளை அமல்படுத்த நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. ஆனால், இதுவரை ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லை. இதற்கு காரணமான அதிகாரிகளை கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

