/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எருமப்பட்டியில் தேசிய வங்கி கிளை அமைக்க ஏற்பாடு: அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி
/
எருமப்பட்டியில் தேசிய வங்கி கிளை அமைக்க ஏற்பாடு: அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி
எருமப்பட்டியில் தேசிய வங்கி கிளை அமைக்க ஏற்பாடு: அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி
எருமப்பட்டியில் தேசிய வங்கி கிளை அமைக்க ஏற்பாடு: அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி
ADDED : ஏப் 07, 2024 03:38 AM
எருமப்பட்டி: ''எருமப்பட்டியில், தேசிய வங்கி கிளை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி உறுதி கூறினார்.
நாமக்கல் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் ராஹா தமிழ்மணி எருமப்பட்டி ஒன்றிய பகுதிகளில், அ.தி.மு.க., அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் அதிகளவு இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் பேசியதாவது:
எருமப்பட்டி பகுதியில் தேசிய வங்கி தொடங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், எருமப்பட்டியில் உள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். கடந்த, அ.தி.மு.க, ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டம், சத்துணவு திட்டம், பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், மாணவர்கள் வெயிலில் பாதிக்கப்படாமல் இருக்க செருப்பு வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களை, அ.தி.மு.க., அரசு கொண்டுவந்தது.
ஆனால், இந்த தி.மு.க., அரசு எந்த நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நல்ல திட்டங்களையெல்லாம் நிறுத்தி வைத்தது தான், தி.மு.க.,வின் சாதனை. பொதுமக்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட்டு ஏமாந்தது போதும். மீண்டும் ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில், எருமப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, பேரூர் செயலாளர் மெடிக்கல் பாலு, அமைப்பு செயலாளர் சேவல் ராஜு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாரதா, ஸ்ரீதேவி, மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

