/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோடநாடு கொலை, கொள்ளையை மக்கள் மறக்க மாட்டார்கள்: எம்.பி., ராஜேஸ்குமார்
/
கோடநாடு கொலை, கொள்ளையை மக்கள் மறக்க மாட்டார்கள்: எம்.பி., ராஜேஸ்குமார்
கோடநாடு கொலை, கொள்ளையை மக்கள் மறக்க மாட்டார்கள்: எம்.பி., ராஜேஸ்குமார்
கோடநாடு கொலை, கொள்ளையை மக்கள் மறக்க மாட்டார்கள்: எம்.பி., ராஜேஸ்குமார்
ADDED : ஏப் 15, 2024 03:18 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஆயில்பட்டி காலனி பகுதியில், ஒன்றிய செயலாளர் ராமசுவாமி தலைமையில், 'இண்டியா' கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து பிரசார கூட்டம் நடந்தது. எம்.பி., சின்ராஜ், அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான, எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியை அடுத்த கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில், கடந்த, 2017ல் யாருமே எதிர்பார்க்காத பல சம்பவங்கள் அரங்கேறின. அந்தாண்டு ஏப்., 23ல் அப்போது கோடநாடு பங்களாவில் காவலாளியாக இருந்த ஓம் பகதுார் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து அங்கே கொள்ளை சம்பவமும் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில், சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்த கனகராஜ் போலீசார் விசாரணையை ஆரம்பித்த போதே சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அடுத்த சில நாட்களில், எஸ்டேட், 'சிசிடிவி' ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். மேலும், முக்கிய குற்றவாளி சயான் கேரளாவில் கார் மீது டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சயானின் மனைவி வினுப்பிரியா, மகள் நீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த தொடர்ச்சியான கொலையும், கொள்ளையும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட பொருளாளர் பாலச்சந்தர், சார்பு அணி நிர்வாகிகள் சண்முகம், சிவக்குமார், ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

