/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் வேட்புமனு தாக்கல் முதல் நாளில் ஒருவர் மட்டுமே மனு
/
நாமக்கல்லில் வேட்புமனு தாக்கல் முதல் நாளில் ஒருவர் மட்டுமே மனு
நாமக்கல்லில் வேட்புமனு தாக்கல் முதல் நாளில் ஒருவர் மட்டுமே மனு
நாமக்கல்லில் வேட்புமனு தாக்கல் முதல் நாளில் ஒருவர் மட்டுமே மனு
ADDED : மார் 21, 2024 02:17 AM
நாமக்கல், தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும், ஏப்., 19ல், ஒரே கட்டமாக நடக்கிறது. இதையொட்டி, நேற்று வேட்புமனு தாக்கல் துவங்கியது. 27ல் வேட்புமனு தாக்கல் முடிகிறது. 28ல் வேட்பு மனு பரிசீலனை செய்யப்படுகிறது.
மார்ச், 30ல், வேட்புமனு திரும்ப பெறப்படுகிறது. அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதை தொடர்ந்து, ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் துவங்கியதை அடுத்து, நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வேட்பாளருடன், 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முதல் நாளான நேற்று, ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார். அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவன தலைவர் காந்தியவாதி ரமேஷ், தனது வேட்பு மனுவை, மாவட்ட தேர்தல் அலுவலர் உமாவிடம் வழங்கினார்.