/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
100 நாள் வேலைத்திட்ட பெயர் மாற்றத்தை திரும்ப பெற எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு
/
100 நாள் வேலைத்திட்ட பெயர் மாற்றத்தை திரும்ப பெற எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு
100 நாள் வேலைத்திட்ட பெயர் மாற்றத்தை திரும்ப பெற எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு
100 நாள் வேலைத்திட்ட பெயர் மாற்றத்தை திரும்ப பெற எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு
ADDED : டிச 20, 2025 06:57 AM

நாமக்கல்: -'மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ள, தேசிய ஊரக வேலை-வாய்ப்பு உறுதி சட்ட திருத்த மசோதவை திரும்ப பெற வேண்டும்,'' என, பார்லியில், எம்.பி., ராஜேஸ்குமார் வலியுறுத்-தினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை, 'விக்ஷித் பாரத்' ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் இத்திட்டத்தில் ஆண்-டுக்கு, 40 லட்சம் மனித வேலை நாட்களாக இருந்தது. ஆனால், தற்போது, 20 லட்சம் மனித வேலை நாட்களாக குறைந்துவிட்-டது. இந்த மசோதா குறித்து விவாதம், ராஜ்யசபாவில் நடந்தது.
அப்போது, நாமக்கல் எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மாற்றியமைக்கும் வகையில், மத்திய அரசு புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளது.
இதில் விதைப்பு மற்றும் அறுவடை காலத்தை கணக்கிட்டு ஆண்-டுக்கு, 60 நாட்கள் வேலை இல்லை என கூறப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சர், 125 நாட்கள் வேலை வழங்கப்படும் எனக் கூறுவது கிராமப்புற ஏழை தொழிலாளர்களை ஏமாற்றும் செய-லாகும். மேலும், கிராமசபை முடிவு செய்ய வேண்டிய வேலை நாட்களை, மத்திய அரசே முடிவு செய்வது உள்ளாட்சி அமைப்பு-களின் அதிகாரத்தை பறிப்பதாகும். காங்., கொண்டு வந்த திட்டம் என்பதால், 100 நாள் வேலை திட்டத்தை முடக்க மத்திய அரசு பார்க்கிறது. எனவே, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, இந்த புதிய மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

