/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
3 பள்ளிகள் பசுமை பள்ளிகளாக தேர்வு அமைச்சர் திறந்து வைப்பு
/
3 பள்ளிகள் பசுமை பள்ளிகளாக தேர்வு அமைச்சர் திறந்து வைப்பு
3 பள்ளிகள் பசுமை பள்ளிகளாக தேர்வு அமைச்சர் திறந்து வைப்பு
3 பள்ளிகள் பசுமை பள்ளிகளாக தேர்வு அமைச்சர் திறந்து வைப்பு
ADDED : டிச 20, 2025 06:58 AM
நாமக்கல்: நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்-துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை சார்பில், 2023-24ம் ஆண்டிற்கான பசுமைப்பள்ளிகளை, அமைச்சர் மதி-வேந்தன் திறந்து வைத்தார். கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:
2023-24ம் கல்வியாண்டிற்கான, பசுமைப்பள்ளிகளாக, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி, ஆர்.பட்டணம் அரசு மேல்நி-லைப்பள்ளி, உடையார்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி தேர்ந்-தெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சூரிய ஒளி மூலம் மின்னற்றால் உருவாக்குதல், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல், மூலிகை தோட்டம் அமைத்தல், காய்கறி தோட்டம் அமைத்தல், மாணவர்களிடம் சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்பு-ணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், விழிப்புணர்வு ஓவியங்கள் வரைதல் மூலம் செய்யப்பட்டுள்ளது.
பசுமைப்பள்ளி ஒவ்வொன்றிற்கும், தலா, 20 லட்சம் ரூபாய் வீதம், 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுமை பள்ளி என்பது எவ்வாறு முக்கியம் வாய்ந்த திட்டம் என்றால், நமது சுற்றுச்சூழல் எவ்வாறு பசுமையாக வைத்திருக்க வேண்டும்; அதில் நமது பங்கு என்ன என்பதை நாம் பள்ளியி-லேயே கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள், உங்கள் பெற்-றொருக்கும், உறவினர்களுக்கும் மரம் நடுத்தல் குறித்து எடுத்து-ரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு, கேடயமும், விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிய-ருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
துணை மேயர் பூபதி, மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

