sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிளஸ் 2, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் கொல்லிமலை மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'

/

பிளஸ் 2, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் கொல்லிமலை மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'

பிளஸ் 2, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் கொல்லிமலை மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'

பிளஸ் 2, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் கொல்லிமலை மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'


ADDED : டிச 14, 2025 08:26 AM

Google News

ADDED : டிச 14, 2025 08:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: கொல்லிமலை, அரியூர் புதுவலவு அரசு மேல்நி-லைப்பள்ளியில், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமையாசிரிய-ராக காளிதாஸ் உள்ளார். இந்நிலையில், மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை)புரு-சோத்தமன், திறன் வகுப்பு மாணவர்களின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, இடைநிற்றல் குழந்தைகளின் விபரங்கள், அவர்-களை மீண்டும் பள்ளியில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பது குறித்தும்,தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம், மாவட்ட கல்வி அலுவலர் புருசோத்தமன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, பள்ளியின் பசுமை பரப்பை அதிக-ரிக்கும் வகையில், பள்ளி வளாகத்தில் மரக்கன்-றுகள் நடப்பட்டன. தலைமையாசிரியர் காளிதாஸ், மாதிரி மேல்நிலைப்பள்ளி தலை-மையாசிரியர் வரதராஜ், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, தலைமையாசிரியர் காளிதாஸ் கூறியதாவது: எங்கள் பள்ளியில் படிக்கும் மாண-வர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 600க்கு, 500க்கு மேலும், பத்தாம் வகுப்பில், 500க்கு, 475 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும், தாலா, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்

என, அறிவித்துள்ளோம். இதையடுத்து, மாணவர்கள் முனைப்புடன் கவனம் செலுத்தி படித்து வருகின்-றனர். ஆசிரியர்களும் அவர்களுக்கு ஊக்கமளித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us