/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தாம்பூல தட்டில் மனு வைத்து அழைப்பு
/
தாம்பூல தட்டில் மனு வைத்து அழைப்பு
ADDED : மே 08, 2025 01:31 AM
நாமக்கல், நாமக்கல்-மோகனுார் சாலையில் செயல்படும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு வந்த, 10 ரூபாய் இயக்கத்தினர், தாம்பூல தட்டில் பழம், மரக்கன்று, கோரிக்கை மனுவை அழைப்பிதழாக வைத்து, கள ஆய்வுக்கு வருமாறு மின்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தனர். தொடர்ந்து அவர்கள் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டியில் நெடுஞ்சாலைப்பணி நடந்து வருகிறது. அதன் பக்கவாட்டில், 40 அடி உயரமுள்ள மின் கம்பம் நடப்
படுகிறது. கம்பத்திற்கு அடியில் கான்கிரீட் தளம் அமைத்து, மின் கம்பம்
நடவேண்டும். ஆனால், வெறும் மண் கொட்டி நடப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்து, அதனால், ஏற்படும் பாதிப்பு மற்றும் மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் குறித்து புகார் கொடுத்தால், எந்த பலனும் இல்லை.
இதனால், 'கோட்ட மேற்பார்வையாளர் நேரில் வந்து கள ஆய்வு செய்து, கான்கிரீட் தளம் அமைத்து மின்கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தாம்பூல தட்டில் பழம், மரக்கன்று, கோரிக்கை மனுவை வைத்து அழைப்பு விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

