/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'நுாறு நாள் சேலஞ்ச்' திட்டத்தில்அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்
/
'நுாறு நாள் சேலஞ்ச்' திட்டத்தில்அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்
'நுாறு நாள் சேலஞ்ச்' திட்டத்தில்அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்
'நுாறு நாள் சேலஞ்ச்' திட்டத்தில்அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்
ADDED : ஏப் 18, 2025 02:25 AM
ராசிபுரம்:தமிழக அரசு சார்பில், சில தினங்களுக்கு முன் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு வாசித்தல் பயிற்சி உள்ளிட்ட திறன்களை அதிகரிக்க, பள்ளிகளில், 'நுாறு நாள் சேலஞ்ச்' திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் மூலம் ராசிபுரம், வி.நகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலை பள்ளியில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பயி லும் மாணவ, மாணவியர், 'இத்திட்டத்தில் முழுமையாக கற்றுக்கொண்டோம்' என்பதை தமிழக அரசுக்கு ஓபன் சேலஞ்ச் செய்தனர்.
இதையடுத்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பொன் குமார், இந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரின் தனி திறமைகளை சோதனை செய்தார். பின், அவர்களை பாராட்டினார். பி.இ.ஓ., அருள்மணி, கிருஷ்ணமூர்த்தி, பள்ளி ஆய்வாளர் பெரியசாமி, தலைமை ஆசிரியை லட்சுமி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.