/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா முன்னாள் அலுவலர்கள் பங்கேற்பு
/
ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா முன்னாள் அலுவலர்கள் பங்கேற்பு
ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா முன்னாள் அலுவலர்கள் பங்கேற்பு
ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா முன்னாள் அலுவலர்கள் பங்கேற்பு
ADDED : டிச 19, 2025 06:09 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில், தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில், ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா கொண்டாடப்பட்டது.
மாநில தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வரதராசன் வரவேற்றார். விழாவில், 100 வயது நிறைந்த புலவர் ராமசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கேப்டன் டாக்டர் சதாசிவம் விழாவை தொடங்கி வைத்தார். முன்னாள் அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் பேசினார். அப்போது அவர், 'மூத்த குடிமக்கள் தங்களது அனுபவங்களை இளைய சமுதாயத்திற்கு வழிகாட்ட பயன்படுத்த வேண்டும்' என்றார்.
தொடர்ந்து மாநில கொள்கைபரப்பு செயலாளர் அசோகன் அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி வரவு செலவு கணக்கை வாசித்தார். மாநில மகளிர் அணி செயலாளர் செல்லம்மாள் நன்றி கூறினார்.