/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதர்மண்டிய மழைநீர் ஓடை துார்வார விவசாயிகள் கோரிக்கை
/
புதர்மண்டிய மழைநீர் ஓடை துார்வார விவசாயிகள் கோரிக்கை
புதர்மண்டிய மழைநீர் ஓடை துார்வார விவசாயிகள் கோரிக்கை
புதர்மண்டிய மழைநீர் ஓடை துார்வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : டிச 28, 2025 07:22 AM

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி அடுத்த கிட-மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீரானது, அங்குள்ள ஓடை வழி-யாக ஆண்டிக்குட்டை வரை செல்வது வழக்கம். இந்த ஓடை நீரை நம்பி, அப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது இந்த ஓடை பகுதி முழுவதும் முள்பு-தர்கள் அடர்ந்து வளர்ந்து காடுபோல் காட்சிய-ளிக்கிறது. பொதுமக்களும் ஒரு பக்கம் ஓடையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் எவ்வளவு மழை பெய்தாலும் ஓடையில் தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.கடந்த மாதம் இப்பகுதியில் தொடர்மழை பெய்-தது.
இதனால் பல்வேறு நீர்நிலைகள் மற்றும் ஓடை-களில் தண்ணீர் வந்தபோதிலும், இந்த ஓடையில் கொஞ்சம் கூட தண்ணீர் தேங்கவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 'முட்புதர்கள் மற்றும் குப்பைகளால் துார்ந்துபோன ஓடையை உடனடியாக துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும்' என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

