sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோழிப்பண்ணைகளில் முட்டையை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப முடிவு

/

கோழிப்பண்ணைகளில் முட்டையை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப முடிவு

கோழிப்பண்ணைகளில் முட்டையை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப முடிவு

கோழிப்பண்ணைகளில் முட்டையை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப முடிவு


ADDED : டிச 20, 2025 06:55 AM

Google News

ADDED : டிச 20, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்-ணைகள் உள்ளன. இவற்றின் மூலம், நாள் ஒன்றுக்கு, 6 கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என, சில நாட்களாக சர்ச்சையான தகவல்கள் பரவி வருகின்றன. இதனால், நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு கோழிப்-பண்ணையார்கள் சங்க அலுவலகத்தில், அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், புற்றுநோய் உருவாகும் என சொல்லப்-படும் நைட்ரோபியூரான் என்ற ஆன்டிபயாடிக் மருந்து, 10 ஆண்-டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டு விட்டது. எனவே, நாங்கள் அதை பயன்படுத்துவது இல்லை என, விளக்கினர்.

இருந்தும், உணவு பாதுகாப்புத்துறையின் நாமக்கல் மாவட்ட நிய-மன அலுவலர் தங்க விக்னேஷ் பங்கேற்று, பல்வேறு ஆலோச-னைகளை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக, உணவு பாது-காப்பு அலுவலர்கள், 11 குழுக்களாக பிரிந்து, நாமக்கல் மாவட்-டத்தில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது, 'ஒரு மாதிரிக்கு, 10 முட்டைகள் வீதம், 55 மாதிரி-களை சேகரித்து வருகின்றோம். சென்னையில் உள்ள அரசு அங்கீ-கரிக்கப்பட்ட ஆய்வகத்திற்கு அனுப்ப இருப்பதாகவும், அந்த ஆய்வின் அடிப்படையில் முட்டையில் எந்த மாதிரியான ஆண்டி-பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியவரும்' என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us