/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரப்பளீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல்
/
அரப்பளீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல்
அரப்பளீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல்
அரப்பளீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல்
ADDED : டிச 19, 2025 06:18 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலை, அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை தொடர்ந்து மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் பகுதியை சேர்ந்த 5 பேர், கோவில் நிர்வாக அதிகாரியான சுந்தர்ராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து, வாழவந்தி நாடு போலீஸ் ஸ்டேஷனில் அரப்பளீஸ்வரர் கோவில் அருகே வசித்து வரும் சின்ன குழந்தை, சதீஷ் குமார், ஜெயவேல், சசிகுமார் மற்றும் தனபால் ஆகிய 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், வாழவந்தி நாடு போலீசார் விசாரிக்கின்றனர்.