/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்., துறை சார்பில் ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டம்
/
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்., துறை சார்பில் ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டம்
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்., துறை சார்பில் ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டம்
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்., துறை சார்பில் ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டம்
ADDED : அக் 02, 2024 02:00 AM
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்., துறை சார்பில்
ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டம்
நாமக்கல், அக். 2-
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. குழு தலைவர் எம்.பி., மாதேஸ்வரன் தலைமை வகித்தார். கலெக்டர் உமா, எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், பிரகாஷ், எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், பிரதம மந்திரி நீர்பாசன திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், மண்வள அட்டை இயக்கம், நுண்ணீர் பாசனத்திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டம் மற்றும் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஊரக குடிநீர் இயக்கம், பாரத பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. 'பணிகள் அனைத்தும், திட்ட வழிகாட்டி நெறிமுறைகள்படி தரமாகவும், குறித்த நேரத்திலும் முடிக்க வேண்டும்' என, குழுவின் தலைவர் எம்.பி., மாதேஸ்வரன் அறிவுறுத்தினார்.
மாநகராட்சி துணை மேயர் பூபதி, மாவட்ட பஞ்., தலைவர் சாரதா, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், டி.ஆர்.ஓ., சுமன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

