/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புனீத் சாகர் அபியான்' திட்டத்தில் துாய்மை பணி
/
புனீத் சாகர் அபியான்' திட்டத்தில் துாய்மை பணி
ADDED : நவ 21, 2024 01:23 AM
புனீத் சாகர் அபியான்'
திட்டத்தில் துாய்மை பணி
மோகனுார், நவ. 21-
தேசிய மாணவர் படை தினத்தையொட்டி, மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 'புனீத் சாகர் அபியான் -2024' நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. 15 தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி., ஈரோடு, கமாண்டிங் ஆபீசர் கர்னல் அஜய்குட்டினோ, அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீசர் லெப்டினன்ட் கர்னல் கோபாலகிருஷ்ணா ஆகியோர் ஆலோசனைப்படி, மோகனுார்
காவிரிக்கரையில் நடந்தது. தலைமையாசிரியர் அருணாசலம் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியையொட்டி, நீர் நிலைகளை துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொடர்ந்து, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளை துாய்மைப்படுத்தினர். கவில்தார் எழில்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை
என்.சி.சி., அலுவலர் சங்கர் செய்திருந்தார்.

