/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி ஆறு வறண்டதால் மீன் பிடிப்பு பாதிப்பு
/
காவிரி ஆறு வறண்டதால் மீன் பிடிப்பு பாதிப்பு
ADDED : பிப் 21, 2024 01:39 AM
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் ஆற்றுப்பகுதியில் ஜிலேபி, லோகு, கெளுத்தி, ஆறா உள்ளிட்ட பல வகையான மீன்கள் உள்ளன. குறிப்பாக இப்பகுதி ஆற்றில் உள்ள ஜிலேபி மீன்கள், பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஜிலேபி மீன்களை பிடித்து கரைக்கு கொண்டு வந்தவுடன், மக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். தினமும், 70க்கும் மேற்பட்டோர் பரிசலில் ஆற்றுக்கு சென்று வலைபோட்டு மீன் பிடிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும், 15 கிலோ வரை மீன்கள் சிக்குகிறது.
கடந்த, 8 மாதங்களாக காவிரி ஆற்றில் தண்ணீ வரத்து அதிகரித்து காணப்பட்டதால், மீன் பிடிப்பு தொழிலும் தொய்வு இல்லாமல் சீராக நடந்து வந்தது. கடந்த சில நாட்களாக ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுவதால் காவிரி ஆறு வறண்டு போய் விட்டது. இதனால் மீன் பிடிப்பு தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

