/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் பறிமுதல் செய்த ரூ.22.95 கோடி மதிப்பு ரொக்கம், நகைகள் ஒப்படைப்பு
/
உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் பறிமுதல் செய்த ரூ.22.95 கோடி மதிப்பு ரொக்கம், நகைகள் ஒப்படைப்பு
உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் பறிமுதல் செய்த ரூ.22.95 கோடி மதிப்பு ரொக்கம், நகைகள் ஒப்படைப்பு
உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் பறிமுதல் செய்த ரூ.22.95 கோடி மதிப்பு ரொக்கம், நகைகள் ஒப்படைப்பு
ADDED : ஏப் 02, 2024 04:05 AM
நாமக்கல்: நாமக்கல் லோக்சபா தொகுதியில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததை அடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட, 22.95 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், தங்கம், வெள்ளி நகைகள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
நாடு முழுதும், ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு, கடந்த, 16ல், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்று முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன்படி, 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கம், 10,000 ரூபாய்க்கு மேல் பரிசு பொருட்கள் ஆவணம் இன்றி எடுத்து சென்றால், அவை பறிமுதல் செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில், உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரொக்கம், தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில், உரிய ஆவணங்களை காட்டியதை அடுத்து சம்பந்தப்பட்ட நபர்களிடம், பணம் மற்றும் நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ராசிபுரம் தொகுதியில், 17 லட்சத்து, 93,775 ரூபாய் ரொக்கம், 6 கோடியே, 20 லட்சத்து, 47,466 ரூபாய் மதிப்புள்ள தங்க நகை ஒப்படைக்கப்பட்டது. சேந்தமங்கலத்தில், 9 லட்சத்து, 17,400 ரூபாய் ரொக்கம், 15 கோடியே, 25 லட்சத்து, 81,921 ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் ஒப்படைக்கப்பட்டன.
நாமக்கல்லில், 63 லட்சத்து, 65,100 ரூபாய் ரொக்கம், ப.வேலுாரில், 40 லட்சத்து, 59,940 ரூபாய் ரொக்கம், 4 லட்சத்து, 52,970 ரூபாய் தங்க நகை ஒப்படைக்கப்பட்டது. திருச்செங்கோட்டில், 5 லட்சத்து, 52,000 ரூபாய் ரொக்கம், குமாரபாளையத்தில், 8 லட்சத்து, 3,050 ரூபாய் ரொக்கம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
ஆறு தொகுதிகளிலும் மொத்தம், ஒரு கோடியே, 44 லட்சத்து, 91,265 ரூபாய் ரொக்கம், 21 கோடியே, 50 லட்சத்து, 82,357 ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைககள் என, மொத்தம், 22 கோடியே, 95 லட்சத்து, 73,622 ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

