/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை மறியலில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு
/
சாலை மறியலில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : டிச 19, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சாலை மறியலில் ஈடுபட்ட, 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமாரபாளையம், அப்புராயன் சத்திரம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வருவதால், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், குடியிருப்புகளை அகற்ற வந்தனர். அப்போது, காவிரி பழைய பாலம் நுழைவு பகுதியில் அப்பகுதியை சேர்ந்த தங்கவேல், 35, உள்பட 7 பேர் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

