/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'கண்டா வரச்சொல்லுங்க; எங்கள் தொகுதி எம்.பி.,யை காணவில்லை' : நாமக்கல்லில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

ADDED : பிப் 28, 2024 07:42 AM
நாமக்கல் : 'கண்டா வரச்சொல்லுங்க; எங்கள் தொகுதி எம்.பி.,யை எங்கேயும் காணவில்லை' என, நாமக்கல் தொகுதி முழுதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுதும் லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. அதற்காக, பா.ஜ., தலைமையிலான கூட்டணியும், 'இண்டியா' கூட்டணியும், கட்சிகளை இழுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் லோக்சபா தொகுதியில், தி.மு.க, கூட்டணியில் இடம்பெற்ற, கொ.ம.தே.க., வேட்பாளர் சின்ராஜ், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, 6.21 லட்சம் ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர் காளியப்பன், 3.61 லட்சம் ஓட்டுகள் பெற்றார். அ.தி.மு.க, வேட்பாளரைவிட, 2.60 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்ற சின்ராஜ், எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த, 5 ஆண்டுகளாக எம்.பி.,யாக பணியாற்றிய சின்ராஜ், சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், 'நான் கடந்த, 5 ஆண்டுகளாக லஞ்சம் வாங்காமல் பணியாற்றி, ஏராளமான திட்டங்களை நாமக்கல் தொகுதிக்கு மட்டும் அல்ல, கொங்கு மண்டலம் முழுமைக்கும் செய்துள்ளேன். மன நிறைவுடன் விடைபெறுகிறேன். இந்த தேர்தலில் போட்டியிடாமல் வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நான் போட்டியில் இருந்து விலகுகிறேன். அவர் என்னைவிட திறமையாக செயல்பட்டால் பாராட்டுவேன்' என்றார்.
இந்நிலையில், நாமக்கல் லோக்சபா தொகுதி, மீண்டும் தி.மு.க., கூட்டணியில், கொ.ம.தே.க.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாமக்கல் லோக்சபா தொகுதி முழுதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதில், 'கண்டா வரச்சொல்லுங்க' என்றும், 'எங்கள் தொகுதி எம்.பி.,யை எங்கேயும் காணவில்லை?' நாமக்கல் லோக்சபா தொகுதி மக்கள், என அச்சிடப்பட்டுள்ளது.