/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குப்பை மேடாக காட்சியளிக்கும் ஆண்டகலுார்கேட் பஸ் ஸ்டாப்
/
குப்பை மேடாக காட்சியளிக்கும் ஆண்டகலுார்கேட் பஸ் ஸ்டாப்
குப்பை மேடாக காட்சியளிக்கும் ஆண்டகலுார்கேட் பஸ் ஸ்டாப்
குப்பை மேடாக காட்சியளிக்கும் ஆண்டகலுார்கேட் பஸ் ஸ்டாப்
ADDED : அக் 28, 2024 05:06 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்து தேசிய நெடுஞ்சாலையில், ஆண்டகலுார்கேட் பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது. நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்-சாலையில், மிக முக்கிய சந்திப்பாக இது உள்ளது. ஆண்டக-லுார்கேட்டில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில், 2,500க்கும் மேற்-பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பயணிகள் காத்திருக்க, 100 அடி துாரத்தில் பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகி-லேயே பயணியர் நிழற்கூடமும் உள்ளது. ஆனால், பஸ் ஸ்டாப் அருகே குப்பைகளை கொட்டி குவிப்பதால், இங்கு யாரும் பஸ்-சுக்காக நிற்பதில்லை. இதனால், நாளடையில் நிழற்கூடத்தை சுற்றி குப்பையும், சவ ஊர்வலம் வண்டி நிற்கும் இடமாகவும் மாறிவிட்டது.
எனவே, பஸ் ஸ்டாப் பகுதியில் பஸ்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்வதுடன், இப்பகுதியை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.