/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
படித்துறை சுற்றிலும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு: குளிக்க, துணி துவைக்க முடியாமல் மக்கள் அவதி

ADDED : ஜன 02, 2024 11:51 AM
பள்ளிப்பாளையம்: பெரியார் நகர் ஆற்றுப்பகுதியில் உள்ள படித்துறையை சுற்றிலும் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளதால், துணி துவைக்கவும், குளிக்கவும் முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பள்ளிப்பாளையம் அருகே, பெரியார் நகர் ஆற்றுப்பகுதியில் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் இந்த படித்துறைக்கு துணி துவைக்கவும், குளிக்கவும் வருகின்றனர். இந்த படித்துறை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக இந்த படித்துறையை சுற்றிலும் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. மேலும், ஆகாயத்தாமரை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது, படித்துறை இருப்பதே தெரியவில்லை. அந்தளவுக்கு ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து காணப்படுகிறது.
இதனால், படித்துறையில் துணி துவைக்கவும், குளிக்கவும் முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். காலில் ஆகாயத்தாமரை சிக்கி கொள்வதால் சிலர் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும், விஷ பூச்சிகள் உலா வருவதால் படித்துறைக்கு செல்லவே மக்கள் அச்சமடைகின்றனர். எனவே, ஆகாயத்தாமரையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கவுன்சிலர் சரவணன் கூறியதாவது:
பெரியார் நகர் ஆற்றுப்பகுதியில் உள்ள படித்துறையை சுற்றிலும் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. இதனை அகற்ற வேண்டும் என, பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்துள்ளேன். இரண்டு நாட்களில் ஆகாயத்தாமரை அகற்றப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.