/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓடப்பள்ளி பாலத்தில் வாகன சோதனைச்சாவடி அவசியம்
/
ஓடப்பள்ளி பாலத்தில் வாகன சோதனைச்சாவடி அவசியம்
ADDED : டிச 29, 2024 01:30 AM
பள்ளிப்பாளையம், டிச. 29-
ஓடப்பள்ளி பாலத்தின் வழியாக, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்து செல்வதால், பாதுகாப்பு கருதி, இங்கு வாகன சோதனைச்சாவடி மையம் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி தடுப்பணை பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக டூவீலரில் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு டாஸ்மாக் கடை உள்ளதால், சாலையிலேயே திறந்தவெளியில் மது அருந்துகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பெண்களுக்கு, பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் மது அருந்துபவர்கள் இடையே தகராறும் ஏற்படுகிறது, இரவு நேரத்தில் தேவையில்லாமல் சிலர் சுற்றி கொண்டுள்ளனர். எனவே பாதுகாப்பு கருதி, பாலத்தில் வாகன சோதனைச்சாவடி அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

