/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட அரசு பள்ளிகளில்2 நாள் கணக்கு தணிக்கை
/
மாவட்ட அரசு பள்ளிகளில்2 நாள் கணக்கு தணிக்கை
ADDED : ஏப் 18, 2025 01:50 AM
நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக, 90 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் கணக்குகள், இரண்டு நாட்களாக தணிக்கை செய்யப்பட்டன.
கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில், ஆங்கில வழி கட்டணம், கணினி கட்டணம், மாற்று சான்றிதழ் தேடு கூலி, சிறப்பு கட்டணம், விளையாட்டு கட்டணம், நன்கொடை விண்ணப்பம் என, 20க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. இது தொடர்பாக, ஆண்டுதோறும் தணிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், தணிக்கை சார்ந்த பிரச்னைகள் இருப்பின் அவை சரிசெய்யப்படுவதற்கான கூட்டு அமர்வு நடக்கிறது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள, 178 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், முதல் கட்டமாக, 90 பள்ளிகளுக்கான தணிக்கை பணிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், கண்காணிப்பாளர் விக்டர்பால் தலைமையில், நேற்று முன்தினம் தொடங்கி, நேற்று வரை நடந்து முடிந்தது. இதில், தங்களுடைய பள்ளி சார்ந்த உரிய ஆவணங்களுடன் தலைமையாசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு, தணிக்கை குறித்து விளக்கமளித்தனர்.

