/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
6 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்பட 18,828 பேர் மனு

ADDED : நவ 20, 2024 07:44 AM
நாமக்கல்: ஆறு சட்டசபை தொகுதிகளில், இரண்டு நாட்கள் நடந்த சிறப்பு முகாமில், பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்வதற்கு, 18,828 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில், கடந்த, 29ல், வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, 14 லட்சத்து, 49,018 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கிடையே, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம், மாவட்டத்தில் மொத்தமுள்ள, 1,629 ஓட்டுச்சாவடி மையங்களிலும், கடந்த, இரண்டு நாட்கள் நடந்தன.
இந்த முகாமில், 2025 ஜன., 1ல், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், தங்களின் பெயர்களை சேர்த்துக்கொள்ள புதிதாக விண்ணப்பம் அளித்தனர். அதேபோல், திருத்தம் செய்யவும், இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கவும் மனு அளித்தனர். பெயர் சேர்த்தலை பொறுத்த வரையில், ராசிபுரம் தொகுதியில், 1,678 பேர், சேந்தமங்கலத்தில், 1,194, நாமக்கல்லில், 1,412, ப.வேலுாரில், 1,099, திருச்செங்கோட்டில், 1,012, குமாரபாளையத்தில், 1,491 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இரண்டு நாட்கள் நடந்த சிறப்பு முகாமில், மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளிலும், மொத்தமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 7,886 பேர், நீக்கம் செய்ய, 4,698 பேர், திருத்தம் செய்ய, 6,241 பேர் என, மொத்தம், 18,828 பேர் விண்ணப்பித்துள்ளனர்.