/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கடை முன் மோடி அமித் ஷா படம் வைத்தவர் கைது
/
கடை முன் மோடி அமித் ஷா படம் வைத்தவர் கைது
ADDED : ஏப் 13, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:நாமக்கல் மாவட்டம்,ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் - ஆனங்கூர் சாலையில், சேகர் என்பவர் பால்கடை நடத்துகிறார்.
அந்த கடையின் முன் ஒரு பலகையில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா புகைப்படங்களை ஒட்டி வைத்திருந்தார்.
இதையறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரியான, உதவி வேளாண்மை அலுவலர் பரமசிவம், 42, 'இது, தேர்தல் விதிமீறல்' என, குமாரபாளையம் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, பால் கடை உரிமையாளரான சேகரை போலீசார கைது செய்தனர்.

