/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லோக்சபா தேர்தலையொட்டி 4 நாட்கள் 'டாஸ்மாக்' மூட உத்தரவு
/
லோக்சபா தேர்தலையொட்டி 4 நாட்கள் 'டாஸ்மாக்' மூட உத்தரவு
லோக்சபா தேர்தலையொட்டி 4 நாட்கள் 'டாஸ்மாக்' மூட உத்தரவு
லோக்சபா தேர்தலையொட்டி 4 நாட்கள் 'டாஸ்மாக்' மூட உத்தரவு
ADDED : ஏப் 16, 2024 01:59 AM
நாமக்கல்;'லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நாளை (ஏப்., 17) முதல், ஓட்டுப்பதிவு நாளான, 19 நள்ளிரவு வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
வரும், 19ல் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், நாளை (ஏப்., 17), காலை, 10:00 முதல், 19 நள்ளிரவு, 12:00 மணி வரையும் மற்றும் ஓட்டு எண்ணும் நாளான, ஜூன், 4ல், காலை, 6:00 முதல், நள்ளிரவு, 12:00 மணி வரையும், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை அனைத்து கடைகளும், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அனைத்தும், மூட வேண்டும்.
மேற்கண்ட நாட்களில், இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

