/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'தற்போது பெட்ரோல் விலை ரூ.1,000க்கு விற்கிறது' சேலம் முன்னாள் மேயர் பேச்சால் கூட்டத்தில் 'லகலக'

ADDED : ஏப் 15, 2024 03:21 AM
ப.வேலுார்: ''தற்போது பெட்ரோல் விலை ஒரு லிட்டர், 1,000 ரூபாய்க்கு விற்கிறது,'' என, ப.வேலுார் அருகே நடந்த, தி.மு.க., பிரசார கூட்டத்தில், சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினியின் பேச்சை கேட்டு, கூட்டத்தில் சிரிப்பலை
எழுந்தது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே கபிலர்மலையில், நேற்று முன்தினம் இரவு, நாமக்கல் லோக்சபா தொகுதியின், தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும், கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி வேட்பாளரை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ''மத்தியில் ஆளும் மோடி அரசே விலைவாசி உயர்வுக்கு காரணமாக உள்ளது. தங்கம் விலை தற்போது, 55,000 ரூபாய்க்கு விற்கிறது. அதேபோல், பத்தாண்டுக்கு முன், பெட்ரோல் விலை, 100 ரூபாய்க்கு விற்றது. ஆனால், தற்போது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 1,000 ரூபாய்க்கு விற்கிறது,'' என்றார்.
அப்போது ஆர்வமாக பேச்சை கேட்டுக்கொண்டிருந்த, தி.மு.க., நிர்வாகிகள், பொதுமக்கள், தற்போது பெட்ரோல் விலை, 1,000 ரூபாய்க்கு விற்கிறது என, தவறாக பேசியதை கேட்டு இருக்கையில் இருந்து நெளிய தொடங்கினர். அங்கு கூடியிருந்த மக்கள் சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டு சிரிக்க தொடங்கினர். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து, மாற்று கட்சியில் இருந்து, 10 வயது சிறுவன் உட்பட, 8 பேர், தி.மு.க.,வில் இணைந்தனர். அதில், 10 வயது சிறுவனுக்கு கட்சி துண்டு அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டனர்.