sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

39வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

/

39வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

39வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

39வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்


ADDED : செப் 15, 2024 02:54 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி,

39வது வார்டில் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநகராட்சி கமிஷன-ருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்ப-ராயன் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல்-மோ-கனுார் சாலையில் பாரதி நகர் மக்களுக்கு, மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த திட்டம் நிறுத்தப்பட்டு, ஜேடர்பா-ளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பாரதி நகர் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. போதிய அழுத்தம் இல்லாததால், வீடு-களுக்கு மிகவும் குறைந்த அளவிலே நீர் வருகிறது. இதற்கு முக்-கிய காரணம், 2 கிலோ மீட்டருக்கு அப்பால் மேல்நிலை நீர்த்-தேக்கத் தொட்டி இருப்பதும், 2,500 இணைப்புகளுக்கு குடிநீர் வந்த பிறகு, பாரதி நகர் பகுதிக்கு நீர் வழங்கப்படுவதாலும் இங்-குள்ள மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.இது குறித்து, முதல்வரின் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த பிரச்-னைக்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதி நகருக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us