/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூட்டுறவு மேலாண்மை பழைய பாடத்திட்டம் முடிவுக்கு வந்ததால் பாஸ் ஆகாதவர்களுக்கு சிக்கல்

ADDED : மே 17, 2024 02:28 AM
நாமக்கல்: நாமக்கல், கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிறுவன முதல்வர் செல்வ குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2002 முதல், 2021ம் ஆண்டு வரை, 7 பாடத்திட்டங்கள் கொண்ட முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி நடத்தப்பட்டது. 2022 முதல், அனைத்து கூட்டுறவு மேலாண்மை நிலையங்களிலும் புதிய பாடத்திட்டத்தின்படி, 10 பாடங்கள், 2 பருவ முறைகளாக பயிற்சி நடத்தப்பட்டு, தனித்தனியாக இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. புதிய பாடத்திட்டம் தொடங்கி, 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதால், பழைய பாடத்திட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே பழைய பாடத்திட்டமான, 7 பாடங்களில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு, டிச., 2025க்குள் துணைத்தேர்வு நடத்தப்படும். இதில் கலந்து கொள்ளாத பயிற்சியாளர்கள், இனி வரும் காலங்களில் புதிய பாடத்திட்டத்தின்படி, முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்றால் மட்டுமே, பட்டயச்சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.