/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடர் மின் நிறுத்தத்தால் குமாரபாளையம் மக்கள் அவதி
/
தொடர் மின் நிறுத்தத்தால் குமாரபாளையம் மக்கள் அவதி
ADDED : ஆக 11, 2024 02:20 AM
குமாரபாளையம்;குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில், நேற்று முன்தினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை மின் நிறுத்த அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால், இரவு, 8:40 மணிக்குத்தான் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதனால் விசைத்தறி, கைத்தறி, ஸ்பின்னிங், டபுளிங் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகின. இரண்டாவது நாளாக, நேற்றும் சில பகுதிகளில் தொடர்ந்து, காலை, 7:00 முதல், 11:00 மணி வரையும்; மாலை, 3:00 முதல், மாலை, 5:40 மணி வரையும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குமாரபாளையம் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.
இதுகுறித்து, மின்வாரிய உதவி இயக்குனர் வல்லப்பதாஸ் கூறியதாவது: மின் பராமரிப்பு செய்யப்படும் பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு முன்கூட்டியே மொபைல் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்ட பின் தான், பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன. இது புரியாமல், மின்வாரியம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

