/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எம்.பி., ராஜேஸ்குமார் முன்னிலையில் அ.தி.மு.க.,வை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
எம்.பி., ராஜேஸ்குமார் முன்னிலையில் அ.தி.மு.க.,வை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் ஐக்கியம்
எம்.பி., ராஜேஸ்குமார் முன்னிலையில் அ.தி.மு.க.,வை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் ஐக்கியம்
எம்.பி., ராஜேஸ்குமார் முன்னிலையில் அ.தி.மு.க.,வை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஏப் 11, 2024 11:22 AM
நாமக்கல்: புதுச்சத்திரம் ஒன்றியத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் முன்னிலையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்டம், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கவுதம் ஏற்பாட்டில், புதுச்சத்திரம் ஒன்றியம், கல்யாணி முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க., துணை செயலாளரும், ஊராட்சி செயலாளரும், கூட்டுறவு தலைவருமான பழனிவேல் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், அக்கட்சியிலிருந்து விலகி, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர். எம்.எல்.ஏ., ராமலிங்கம் உடனிருந்தார்.
தொடர்ந்து, எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த, 3 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை செய்து முடித்துள்ளார். பெண்களுக்கான உரிமைத்தொகை, இலவச பஸ், உயர்கல்விக்கான உதவித்தொகை, காலை உணவு திட்டம், நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன், இலவச வீட்டுமனை பட்டா என பட்டியலை முடிக்க ஒரு நாள் போதாது. இந்த சாதனைகளை பார்க்கும் எதிர்க்கட்சி நிர்வாகிகள் பலர் தாமாகவே, தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் மாவட்டம் முழுதும், 1,000க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட அமைப்புகள், 'இண்டியா' கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
புதுச்சத்திரம் ஊராட்சி
ஒன்றியக்குழு தலைவர் சாந்தி வெங்கடாஜலம், துணைத் தலைவர் ராம்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் மனோகரன், மருத்துவர் அணி துணை அமைப்பாளர் சிவகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி, பாபு, இளைஞர் அணி அமைப்பாளர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

