/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி துவக்கம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி துவக்கம்
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி துவக்கம்
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி துவக்கம்
ADDED : ஏப் 11, 2024 11:03 AM
நாமக்கல்: லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, வரும், 19ல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல், கடந்த மார்ச், 20 முதல், 27 வரை நடந்தது. நாமக்கல் லோக்சபா தொகுதியில், 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு பயன்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், ஓட்டை சரிபார்க்கும், 'விவிபேட்' கருவிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சங்ககிரி சட்டபை தொகுதியில், 312 ஓட்டுச்சாவடிகள், ராசிபுரம், 261, சேந்தமங்கலம், 284, நாமக்கல், 289, ப.வேலுார், 254, திருச்செங்கோடு, 261 என, மொத்தம், 1,661 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி, நேற்று துவங்கியது.
இப்பணி முடிந்த பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், 'சிசிடிவி' பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பு அறையில் மீண்டும் வைத்து பூட்டி, 'சீல்' வைக்கப்படும். இந்த இயந்திரங்கள் ஓட்டுப்பதிவின் போது, சம்பந்தப்பட்ட ஓட்டுச் சாவடி மையங்களுக்கு எடுத்து செல்லப்படும்.
நாமக்கல் பி.டி.ஓ., அலுவலகம், சங்ககிரி டவுன் பஞ்., சங்ககிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில், வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியை, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா ஆய்வு செய்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்த்திபன், முத்துராமலிங்கம், லோகநாயகி, கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

