/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓட்டுப்பதிவு நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை: கலெக்டர்
/
ஓட்டுப்பதிவு நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை: கலெக்டர்
ஓட்டுப்பதிவு நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை: கலெக்டர்
ஓட்டுப்பதிவு நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை: கலெக்டர்
ADDED : ஏப் 13, 2024 07:37 AM
நாமக்கல் : 'நாமக்கல் மாவட்டத்தில், வரும், 19ல் ஓட்டுப்பதிவு நாளன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்' என, கலெக்டர் உமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, லோக்சபா தேர்தலின் ஓட்டுப்பதிவு நாளான, வரும், 19ல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலை, ஓட்டல், பேக்கரி, உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், லாரி பட்டறைகள் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்.
அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான தொழில் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஆகிய அனைத்து வகை தொழிலாளர்களுக்கும், 100 சதவீதம் ஓட்டளிக்க வசதியாக அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
மேலும், தேர்தல் ஓட்டுப்பதிவு நாளுக்கான சம்பளம் வழக்கமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு வழங்கப்பட்டு வரும் சம்பளமாகவும், அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச சம்பளத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும். விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது புகாரளிக்க நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள, 9245828711, 9944625051 ஆகிய செல்போன் எண்களை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

