/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'ஆற்றுப்பகுதியில் சிறுவர்கள் செல்ல வேண்டாம்'
/
'ஆற்றுப்பகுதியில் சிறுவர்கள் செல்ல வேண்டாம்'
ADDED : ஜூலை 29, 2024 01:58 AM
பள்ளிப்பாளையம்: காவிரி ஆற்றுப்பகுதியில் சிறுவர்கள் செல்ல அனுமதிக்க வேண்டாம் என, பொது மக்களுக்கு, கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றோரத்தில் நாட்டாக-வுண்டம்புதுார், சந்தைப்பேட்டை, பாவடித்தெரு, சத்யா நகர், ஜனதா நகர் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. தற்போது, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று மாலை, கலெக்டர் உமா, பள்ளிப்பாளையம் பகுதியில், காவிரி ஆற்றோர பகுதி, முகாமை ஆய்வு செய்தார்.
நாட்டாகவுண்டம்புதுார் பகுதியில் ஆய்வு செய்தபோது, ஏராள-மான சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த கலெக்டர், அங்குள்ள மக்களிடம், சிறுவர்களை ஆற்றுப்ப-குதிக்கு விட வேண்டாம். பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். ரேஷன், ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட முக்-கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அறிவுறுத்-தினார்.
தொடர்ந்து, ஜனதா நகர் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, நகராட்சி அதிகாரியிடம், ஆற்றுப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு-களை ஏன் அகற்றவில்லை. ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் நக-ராட்சி அதிகாரி மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்ச-ரிக்கைவிடுத்தார்.

