/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏழை மக்கள் பயன்பெற ரூ.54 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனை: எம்.பி., ராஜேஸ்குமார்
/
ஏழை மக்கள் பயன்பெற ரூ.54 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனை: எம்.பி., ராஜேஸ்குமார்
ஏழை மக்கள் பயன்பெற ரூ.54 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனை: எம்.பி., ராஜேஸ்குமார்
ஏழை மக்கள் பயன்பெற ரூ.54 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனை: எம்.பி., ராஜேஸ்குமார்
ADDED : ஏப் 08, 2024 02:47 AM
ராசிபுரம்:''ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ராசிபுரத்தில், 54 கோடி ரூபாயில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.
நாமக்கல் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் உள்ள, கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரன் பாச்சல் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். மாவட்ட கழக செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் பாச்சல் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டனர்.
தொடர்ந்து, ராஜேஸ்குமார் எம்.பி., பேசியதாவது:தேர்தல் நேரத்தில், தி.மு.க., அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மகளிருக்கு இலவச பஸ் பயணம், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, 1,000 ரூபாய் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் புதிய குடிநீர் திட்டத்திற்கு, 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் தாகத்தை தீர்த்த ஒரே முதல்வர் ஸ்டாலின் தான்.
ராசிபுரம் அடுத்த பாச்சல் கிராமத்திற்கு அருகே, தேசிய நெடுஞ்சாலையோரம், 54 கோடி ரூபாய் மதிப்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், நெசவு தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை மக்கள் உயர் சிகிச்சைக்கு சேலம், நாமக்கல் செல்லாமல் மிக அருகிலேயே சென்று தரமான மருத்துவ சிகிச்சையை பெற முடியும்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, காமராஜர், கருணாநிதிக்கு பின், ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் காலையில் பள்ளிக்கு பசியோடு போகக்கூடாது என்ற நோக்கத்தோடு தமிழக முதல்வர் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.

