/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'பணம் வாங்கிக்கொண்டு இடமாற்றம் குற்றங்கள் அதிகரிக்க காரணம்'
/
'பணம் வாங்கிக்கொண்டு இடமாற்றம் குற்றங்கள் அதிகரிக்க காரணம்'
'பணம் வாங்கிக்கொண்டு இடமாற்றம் குற்றங்கள் அதிகரிக்க காரணம்'
'பணம் வாங்கிக்கொண்டு இடமாற்றம் குற்றங்கள் அதிகரிக்க காரணம்'
ADDED : ஆக 24, 2024 01:20 AM
நாமக்கல், ஆக. 24-
''தமிழக காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகளை பணம் வாங்கிக்கொண்டு இடமாற்றம் செய்வதால் தான் குற்றங்கள் அதிகரிக்கிறது,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார்.
இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் கூறியதாவது: பா.ஜ., சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்க்க பயிலரங்கம் துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 42 லட்சம் உறுப்பினர்கள், பா.ஜ.,வில் உள்ளனர். இந்த முறை, ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய், கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார். கட்சியின் விளக்கங்களையும், கொள்கைகளையும் மாநாட்டில் தெரிவிப்பதாக கூறியுள்ளார். அதன் பின் கருத்துக்களை சொல்ல முடியும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழக காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகளை பணம் வாங்கிக்கொண்டு இடமாற்றம் செய்கின்றனர். அதனால், தான், குற்றங்கள் அதிகரிக்கிறது. நேர்மையான அதிகாரிகள் தமிழகத்தில் பணி செய்ய முடியவில்லை. குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினரால் முடியவில்லை. இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

