/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குண்டும், குழியுமான சாலை கலிங்கப்பட்டி மக்கள் அவதி
/
குண்டும், குழியுமான சாலை கலிங்கப்பட்டி மக்கள் அவதி
குண்டும், குழியுமான சாலை கலிங்கப்பட்டி மக்கள் அவதி
குண்டும், குழியுமான சாலை கலிங்கப்பட்டி மக்கள் அவதி
ADDED : செப் 08, 2024 07:45 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலை யூனியன், ஆரியூர் நாடு பஞ்., கலிங்கப்பட்டி குக் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. கடந்த, 7 ஆண்டுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது, குண்டும், குழியுமாக மாறியது. தற்போது வரை இந்த சாலையை பஞ்., நிர்வாகம் புதுப்பிக்காமல் விட்டுள்ளதால், இங்கிருந்து பள்-ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் முதியோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் உடல்-நிலை சரியில்லாதவர்களை, செம்மேட்டில் உள்ள அரசு மருத்துவ-மனைக்கு அழைத்து செல்ல மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே, பஞ்., நிர்வாகம் இந்த
குண்டும், குழியுமான சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.